<$BlogRSDUrl$>
Tuesday, March 30, 2004
தலை சுற்ற வைத்த சீன "தலை" கதை 
இன்று பொழுது போகாமல் வலை சுற்றி (காலேஜ் படிக்கறப்ப நிறைய ஊர் சுற்றி, இப்பவும் அதே ஞாபகம்), கொண்டு இருந்த போது சீன வானொலி நிலையத்தில் தினசரி தமிழ் ஒலிபரப்பு நடைபெறுகிறது என்பதை அறிந்து ஆவலில் அந்த இணைய தளத்தில் தலையை நுழைத்தேன். சீனத்திலும் தமிழ்க்கொடி பட்டொளி வீசி பறக்கிறது என்பது அகமகிழ வைக்கிறது. தமிழ் இணையத்தில் மிக பிரபலமான பி.பி.சி நிறுமத்தின் இனையத்தளத்தில் "தமிழோசை" என்னும் ஒரு சொல்லைத் தவிர மருந்துக்கு கூட வேறு தமிழ்ச்சொற்களை காணவில்லை. ஆனால் சீன வானொலி நிலையத்தின் தமிழ் சேவை இணைய தளம், அற்புதமாக வடிவமைக்கப்பட்டதோடல்லாமல் (யப்பா, எவ்ளோ பெரிய வார்த்தை), முழுக்க முழுக்க தமிழில் அமைந்திருப்பது பாராட்டப்படக்கூடியது. இந்த தளம் செய்திகளை தருவதோடல்லாமல், சீன கலாச்சாரம், பண்பாடு, சீன மக்களின் வாழ்க்கை முறை, பயணம், விளையாட்டு, உணவு போன்ற பல தகவல்களைத் தருகிறது. செய்தி தொகுப்பு அருமையாக இருந்தாலும் செய்தி வாசிப்பு தான் சகிக்கல, யாராவது நல்லா தமிழ் பேசுற ஆசாமியா புடிச்சு வாசிக்க வைச்சிருக்கலாம்.
"தரைப்பு செய்திகர்...சீனாவில் பரவை காச்ச்ல் ஒரிக்க பட்டு விட்டது" - இப்படித்தான் அந்த செய்தி வாசிப்பாளர் வாசிக்கறார். அங்கயும் இந்த 'ற', 'ர', 'ல', 'ட' எல்லாமே "தகளாறு" போல. குறைகள் இருந்தாலும், அவர்களது முயற்சி கட்டாயம் பாராட்டப்பட வேண்டும்.
ம்ஹ்ம், புள்ளயார் புடிக்க போய் வேற எதையோ பிடிச்ச மாதிரி எதையோ எழுதப் புறப்பட்டு, கடைசில வெப்சைட் ரிவியூ எழுதி முடிச்சிட்டேன். சரி தலைப்ப பத்தி ஒன்னு ரெண்டு வரிலயாவது சொல்லிடறேன்.

அங்கே இடப்பட்டிருந்த "காட்டிக் கொடுத்த தலை" என்ற சிறுகதையை படித்து, தலை சுற்றி மயக்கம் வர கீழே விழுந்தேன். அட உண்மையா தாங்க!!
ஆரம்பத்தில் ஏதோ மர்ம கதை போல இருந்தாலும் லாஜிக்கே இல்லாமல் கதை செல்கிறது (இத விட வேற என்ன பெரிய லாஜிக் வேணும்). ஒரு வழியா உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து "சுபம்" போட்டு கதைய முடிக்கறாங்க. கதை புரிஞ்சுதோ இல்லயோ கதைல வர்ர பாத்திரங்களின் பெயர்கள் கடைசி வரைக்கும் மனசுல நிக்கல. ஒவ்வொரு பாத்திரத்தின் பெயர் வரும் போதும், முன் பக்கம் சென்று யார் அதுன்னு ரெஃபர் பண்ணி ரெஃப்ர் பண்ணி, அட போங்கப்பா..!! நம்ம ஊர் டைரக்ட்ர்களின் கண்ணில பட்டா, இது தான் அடுத்த சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படம்.
மறுமொழிகள் | பின்தொடர்புகள்