<$BlogRSDUrl$>
Monday, May 24, 2004
ஒரு சிறிய இடைவேளை 

பணி நிமித்தமாக சனி இரவு அமெரிக்கா புறப்படுகிறேன். முதலில் வட கரோலினாவில் உள்ள சார்லட் நகரத்தில் பத்து நாட்கள் வேளை. பிறகு சிகாகோவில் ஒரு மாதம் என்று மொத்தம் நாற்பது நாள் பயணம். மேலும் நீட்டிக்கப்படலாம் என்று பயமுறுத்தல் வேறு. பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு அவ்வளவு நாள் அங்கே இருக்க முடியாதென்று மறைமுகமாகவும் நேரடியாகவும் பலமுறை சொல்லியாச்சு. பொறுத்திருந்து தான் பார்க்கனும். அங்கே போனாத்தான் முழு நிலவரமும் தெரியவரும். ஆனா ஒன்னு, வேளை பெண்டு கழண்டுவிடும்ன்னு மட்டும் தெளிவா தெரியுது.


ஆகவே நண்பர்களே, இந்த இடைவேளை ஜுலை முதல் வாரம் வரை நீட்டிக்கப்படுகிறது. ஆனா நடுவில் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுவேன். அதனால அப்பப்ப வந்து எட்டிப் பாருங்க...



வர்ட்டா!!
மறுமொழிகள் | பின்தொடர்புகள்