<$BlogRSDUrl$>
Monday, May 24, 2004
ஒரு சிறிய இடைவேளை 

பணி நிமித்தமாக சனி இரவு அமெரிக்கா புறப்படுகிறேன். முதலில் வட கரோலினாவில் உள்ள சார்லட் நகரத்தில் பத்து நாட்கள் வேளை. பிறகு சிகாகோவில் ஒரு மாதம் என்று மொத்தம் நாற்பது நாள் பயணம். மேலும் நீட்டிக்கப்படலாம் என்று பயமுறுத்தல் வேறு. பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு அவ்வளவு நாள் அங்கே இருக்க முடியாதென்று மறைமுகமாகவும் நேரடியாகவும் பலமுறை சொல்லியாச்சு. பொறுத்திருந்து தான் பார்க்கனும். அங்கே போனாத்தான் முழு நிலவரமும் தெரியவரும். ஆனா ஒன்னு, வேளை பெண்டு கழண்டுவிடும்ன்னு மட்டும் தெளிவா தெரியுது.


ஆகவே நண்பர்களே, இந்த இடைவேளை ஜுலை முதல் வாரம் வரை நீட்டிக்கப்படுகிறது. ஆனா நடுவில் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுவேன். அதனால அப்பப்ப வந்து எட்டிப் பாருங்க...வர்ட்டா!!
மறுமொழிகள் | பின்தொடர்புகள்

Thursday, May 13, 2004
மைக்கெல் ஜோர்டான் - மென்பொறியாளன் 
"I have missed more than 9,000 shots in my career. I have lost almost 300 games. On 26 occasions I have been entrusted to take the game winning shot... and I missed. I have failed over and over and over again in my life. And that's precisely why... I succeed."

Michael Jordan
(1993 - American Basketball Player, Actor)

இதுவே அவர் ஒரு மென்பொறியாளனாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று ஒரு சின்ன (சுட்ட!!) கற்பனை

"I have corrupted more than 9,000 programs in my career. I have crashed almost 300 computers. On 26 occasions I have been entrusted to deliver program on deadline... and I missed. I have failed over and over and over again in my life. And that's precisely why... I am still here !!! "

Michael Jordan
Software Engineer
(Further description not necessary)
மறுமொழிகள் | பின்தொடர்புகள்

நாயுடுகாரு என்ன செய்துகொண்டிருப்பார்?? 
தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் நாயுடுகாருக்கு சரி அடி. சரி சட்டமன்றம் தான் போயிடுச்சு, மக்களவை ரிசல்ட் வரட்டும்ன்னு இருந்தவரை தலையில தட்டி வீட்டுல உட்கார வைத்துவிட்டார்கள். வீட்டுல என்ன பன்றார்ன்னு எட்டி பார்த்தா....


அட அதை ஏன் கேட்கிறீங்க. அதான் போட்டோ புடிச்சி போட்டிருக்கோம்ல்ல நீங்களே பாருங்க

பாவம் அடைச்சு வைக்கிற அளவுக்கு அவர்கிட்ட MLA இல்லையாம்...அதான் இப்படி :)
மறுமொழிகள் | பின்தொடர்புகள்

Monday, May 10, 2004
Which Movie Do u belong in?? 
இன்னைக்கு பால சுப்ரா தன் வலைப்பதிவுல முயற்சி செய்து பார்க்க சொல்லி ஒரு quiz URL கொடுத்திருந்தார். சரி காசா பனமா முயற்சி செய்வோமே என செஞ்சதில், முடிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது.

CWINDOWSDesktopPowerRangeres.jpg
Power Rangers Movie!


What movie Do you Belong in?(many different outcomes!)
brought to you by Quizilla

முதல் வரி சரியா, தப்பான்னு எல்லாம் தெரியாது. ஆனா கடைசி வரி முற்றிலும் உண்மை. என் நண்பர்கள் அனைவரும் சொக்கத்தங்கம். நன்றி பாலா :)
மறுமொழிகள் | பின்தொடர்புகள்

வலைப்பூவுல error?? 
வலைப்பூவில் கருத்து தெரிவிக்க இன்று பிரம்மப் பிரயத்தனம் செய்தும் என்னால் முடியவில்லை. இந்தியாவில் BSNL தொலைபேசியில் எப்ப டயல் செஞ்சாலும் "இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து எண்களும் உபயோகத்தில் உள்ளது, தயவு செய்து சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்" அப்படின்னு ஒரு அம்மா தன் இனிமையான் குரலில் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அதே மாதிரி "இங்கயும் கொஞ்ச நேரம் கழிச்சு கருத்து போடுங்கன்னு" சொல்லுது. கருத்து தெரிவிக்க கூட நல்ல நேரம், ராகு காலம், எம் கண்டம்னு எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. காலையிலிருந்து அரை மணி விட்டு, ஒரு மணி விட்டு என்று விட்டு விட்டு முயற்சி செய்து பார்த்தாச்சு. ஒன்னும் வேளைக்காகிற மாதிரி தெரியல. கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறது.
Valiapoo Error
இது வலைப்பூவுல மட்டுமான பிரச்சனையா இல்லை யாழ்.நெற் 'ன் பிரச்சனையா என்று திடிரென சந்தேகம் வர ராஜாவின் வலைப்பதிவிற்கு சென்று முயற்சிசெய்து பார்த்தேன். அங்கு வேலை செய்வது வலைப்பூவுல மட்டும் ஏன் செய்யமாட்டேங்குது??
ஒருவேளை என்னை abusive user லிஸ்ட்ல சேர்த்துடிங்களா? யாராக இருந்தாலும் தயவு செய்து என் பெயரை அந்த லிஸ்டிலிருந்து நீக்கிடுங்கப்பா, நான் ரொம்ப நல்ல பையனாக்கும். :). ஐய்யா
ஆசிரியரே, கடவு சொல்லை மட்டும் தான மாத்திவிட்டிங்க?? கொஞ்சம் என்ன பிரச்சனைன்னு பார்த்து சொல்லுங்களேன்.

உங்க பதிவுக்கான கருத்தை இங்க போடுறேன்...

தீபாவளிக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். தீபாவளி எப்பன்னு முன்கூட்டியே சொன்னா வர்ஷாக்கு இந்தியாவிலிருந்து நிறைய பட்டாசு (வெடி) வாங்கி அனுப்பறேன் ;)


இந்த தம்மாத்துண்டு கருத்துக்கு தான் இவ்வளவு ஆட்டமான்னு கேட்கிறீங்களா?? என்ன பண்றது, இதை போடக்கூட முடியலையே!!
மறுமொழிகள் | பின்தொடர்புகள்

Friday, May 07, 2004
கணக்கு பாடம் 

மறுமொழிகள் | பின்தொடர்புகள்

Wednesday, May 05, 2004
மற்றுமொரு படக்காட்சி 
ஏன்டா இப்படி புகைப்படமா வலைபதிஞ்சு பயங்கரமா படம் போடுறன்னு நீங்க அங்கெயிருந்து கத்துறது இங்கே நல்லாவே கேட்குது. என்னங்க பன்றது, வேலைப்பளு அதிகம்...கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் உங்க வலைபதிவையெல்லாம் படிக்கறதுக்கு தான் சரியாயிருக்கு. போன வார வலைப்பூ ஆசிரியர் கண்ணன் சொன்ன மாதிரி இதெல்லாம் மென்பொறியாளனின் கஷ்டங்கள். சரி அதிகமா படம்போடாம எனக்கு புடிச்ச ரெண்டு படத்தை மட்டும் போட்டுட்டு மத்த படங்களுக்கு சுட்டிய கொடுத்துடறேன்.


படம்-1
Sand Sculpture - 1


படம்-2
Sand Sculpture - 2>


படம்-3 |
படம்-4
|
படம்-5 |
படம்-6 |படம்-7 |
படம்-8 |
படம்-9 |
படம்-10
OK வா.. சரி நேரமாச்சு...கடமை அழைக்கிறது. நா வர்ட்டா!!
மறுமொழிகள் | பின்தொடர்புகள்