<$BlogRSDUrl$>
Friday, April 23, 2004
டைகர் உட்ஸ் எங்கே நிற்கிறார்?? 
இன்று காலை இந்த படம் என் நன்பனிடமிருந்து மின்னஞ்சலில் வந்தது. இந்த படத்தில் டைகர் உட்ஸ் எங்கே நிற்கிறார் என்று பாருங்கள்.
First


Second


Third


Fourth


Fifth


Lastஅவர் நிற்கும் கட்டிடம், புர்ஜ் அல் அராப் என்னும் 7 நட்சத்திர ஹோட்டல். இது யு.ஏ.ஈ நாட்டில் ஜுமைரா கடற்கரையில் அமைந்துள்ளது. இது ஈஃபில் டவரை விட ஒசரமாம்பா!! இது யுனைட்டட் அராப் எமிரேட்ஸ் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தொம் அவர்களுக்கு சொந்தமானது (இவ்வளவு பெரிய பேர எப்படி கூப்புடுவாங்க? திரும்பவும் பெயர் பிரச்சனையா... வேண்டாம்பா!!). ஐந்தாவது படத்தில் கடற்கரை ஓரத்தில் இருப்பதும் அவருக்கு சொந்தமான 5 நட்சத்திர விடுதி தான்.
யப்பா, எண்ணை கிணறு என்னென்ன வேலை செய்யுது பாருங்க!!
மறுமொழிகள் | பின்தொடர்புகள்

Thursday, April 22, 2004
வந்துட்டான்யா...வந்துட்டான்யா!! 
இன்று பவித்ரா தனது வலைபதிவில் ஜிமெயில் மின்னஞ்சலை பற்றி எழுதியுள்ளார். இதை பற்றி முன்பே கேள்விப்பட்டு, இந்த முறையாவது எனது முழு பெயரில் ஒரு அக்கவுன்ட் திறக்கவேண்டும் என்ற ஆவலில் அவர்களிடம் முன்பதிவு செய்து வைத்திருந்தேன்.


முதல்முறையாக யாஹூ தளத்தில் அக்கவுன்ட் திறக்கும் போது கார்த்திகேயன் என்ற பெயரை வேற யாரோ தட்டிகொண்டு சென்றதால், எனது பெயரில் கொஞ்சம், என் அப்பா பெயரில் கொஞ்சம் என வெட்டி யாருக்கும் புரியாத பெயரில் ஒரு அக்கவுன்ட் திறந்து, நன்பர்களிடம் அதற்கு விளக்கம் சொல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அதனால் இன்று பவித்ராவின் வலைபதிவை படித்ததும் ஆவலில் முட்டி மோதி ஜிமெயில் தளத்திற்கு சென்று பார்த்தால், அக்கவுன்ட் திறக்க சுட்டியே இல்லை. சரி பவித்ரா ஏதோ டுபாக்கூர் விட்டிருக்கிறார் என்று அந்த பதிவின் பின்னூட்டத்தில் என் ஆதங்கத்தை தெரிவித்து விட்டு மற்ற வேலைகளில் முழுகினேன். இன்று ஒரு பதிவாவது செய்யவேண்டுமென பிளாகர் தளத்தில் நுழைந்தால், இதோ ஜிமெயில் அக்கவுன்ட் திறக்க சுட்டி அங்கே கொடுக்கப்பட்டுள்ளது.


office


ஆஹா...கும்பிட போன தெய்வம் குறுக்கில வருதேன்னு "கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன்" என்று தலைவரின் பாடலை பாடிக்கொண்டே முதல் முறையாக எனது முழு பெயரில் அக்கவுன்ட் திறந்தேன். இதே பெயரை (ந.கார்த்திகேயன்) கொண்ட தோழர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.


முதன்முறை பயன்படுத்தியதுமே மற்ற மின்னஞ்சலுக்கும், இதற்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. மவுசின்(mouse) துனையின்றி விசைபலகை கொண்டு இதை இயக்க முடியும். மேலும் நாம் மின்னஞ்சல் அனுப்பும் நபரின் மின்னஞ்சல் முகவரியை தானாக சேமித்து வைக்கிறது. அது மட்டுமல்லாமல், யாருக்கு அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புகிறோமோ, அவர்களது முகவரியை தனியாக தொகுத்து வைக்கிறது. மேலும் மின்னஞ்சல் அனுப்பும் பொழுது, முகவரியின் முதல் எழுத்தை தட்டியதும், அவ்வெழுத்தை கொண்டுள்ள அனைத்து முகவரிகளையும் பட்டியலிட்டு காட்டுகிறது (பார்க்க படம்)


mail id listing


மேலும், உங்களுக்கு மட்டும் வரும் அஞ்சல்களை, உங்கள் குழுவுக்கு வரும் அஞ்சல்களிலிருந்து பிரித்து காட்டுகிறது. வேறு எந்த அஞ்சல் சேவை நிறுவனமும் கொடுக்காத 1கிகாபைட் இடம், தேடும் வசதி, கான்வர்சேசன் சார்டிங் (conversation sorting) போல பல வசதிகளும் இதில் உண்டு. நீங்களும் இதை பயன்படுத்தி, இதில் வேற என்ன தனித்துவம் இருக்கிறதென்று சொல்லுங்க. பலரும் ஜிமெயிலை பற்றி பிரைவசி அது இதுன்னு என்னென்னவோ சொல்றாங்க. எதுக்கும் இதை ஒரு தடவை படிச்சுட்டு முடிவெடுங்க.
மறுமொழிகள் | பின்தொடர்புகள்

உங்க ஆஃபிஸ் எப்படி?? 
office


இந்த வசதி எங்கயாவது இருக்குதா??
மறுமொழிகள் | பின்தொடர்புகள்

Wednesday, April 21, 2004
எதை வாங்கலாம்??? 
அப்பப்பா...இந்த பெங்களூர் ரோட்டுல வண்டி ஓட்டி ரொம்ப போரடிக்குதுங்க. இப்படி ஒரு கப்பல் வாங்கிட்டு அந்தமான் பக்கம் செட்டில் ஆகலாம்ன்னு நினைக்கிறேன்.

சாய்ஸ் -1

இதுவா??சாய்ஸ் -2

இல்ல இதுவா?
ஆனா இந்த ரெண்டுல எத வாங்கறதுன்னு ஒரே குழப்பம். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க pls!!

இருங்க இருங்க!! அடிக்க வராதீங்க. இன்னிக்கு நம்ம வலைப்பூ ஆசிரியர் அருண், எனக்கு என் வீட்டு முகவரியே மறந்து போச்சான்னு கேட்டிருக்கிறார். அவருக்கு எப்படி பதில் சொல்லறதுன்னு தெரியல...அது தான் இப்படி.

இந்த ரெண்டு படத்தையும் காட்டி , இதே கேள்விய என் ஆத்துக்காரம்மாகிட்ட கேட்டதுக்கு "நீ கெட்ட கேட்டுக்கு இது ஒன்னு தான் கொறச்சலான்னு," ஒரு எதிர்கொரலு.


அது இருக்கட்டும், நீங்க சொல்லுங்க, ரெண்டுல எத வாங்கலாம்??


மறுமொழிகள் | பின்தொடர்புகள்